HomeLifestyleதர்பூசணி சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்லைனா பிரச்சனைதான்

தர்பூசணி சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்லைனா பிரச்சனைதான்

கோடை வெயில் தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில் உடலை குளிர்விக்கும் இயற்கை வரப்பிரசாதமாக தர்பூசணி இருந்து வருகிறது. 92% நீர்ச்சத்து கொண்ட இந்த பழம் தாகத்தை உடனடியாக தீர்த்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

ஆனால் இதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். சில பொதுவான பழக்கங்கள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் கவனிக்காமல் விடுகிறார்கள். தர்பூசணியை சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் என்னென்ன என்பதை இதில் விரிவாக பார்ப்போம்.

இதையும் படிங்க : கோடைக்காலத்தில் வயிற்று ஆரோக்கியம்: செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க எளிய வழிகள்

பால் மற்றும் பால் பொருட்கள்

தர்பூசணி சாப்பிட்ட உடனே பால் அல்லது பால் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஏனென்றால் தர்பூசணியில் உள்ள சிட்ரிக் தன்மை மற்றும் வைட்டமின் C, பாலுடன் சேரும்போது வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம். பாலில் உள்ள புரதமும் தர்பூசணியின் இயல்பும் ஒன்றுக்கொன்று பொருந்தாததால், வாயு தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம்

பழம் சாப்பிட்டதும் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். இது தவறான பழக்கமாகும். ஏற்கனவே இதில் அதிக நீர் இருப்பதால், உடனடியாக தண்ணீர் குடித்தால் செரிமான அமிலங்கள் நீர்த்துப் போகும். இதன் விளைவாக செரிமானம் மெதுவாகி வயிற்று வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம். எனவே குறைந்தது 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது சிறந்தது.

இதையும் படிங்க : ஏசியால் கரண்ட் பில் அதிகம் வருதா? இந்த தவறை பண்ணாதீங்க

மாமிசம் மற்றும் அதிக புரத உணவுகள்

பிரியாணி, இறைச்சி போன்ற உணவுகளுக்குப் பிறகு தர்பூசணி சாப்பிடுவது ஒரு பெரிய தவறு. காரணம், மாமிச உணவுகள் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். ஆனால் தர்பூசணி மிக வேகமாக செரிமானமாகிவிடும். இரண்டும் ஒன்றாக சேரும் போது செரிமான செயல்முறை குழப்பமடைந்து, வயிற்றில் உணவு புளித்து வயிறு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும்.

தர்பூசணி ஒரு ஆரோக்கியமான உணவுதான். ஆனால் அதை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு நன்மைகளையும் பெற முடியும். சிறிய கவனக்குறைவுகள் பெரிய செரிமான பிரச்சனைகளாக மாறக்கூடும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments