மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு : யார் இவர்?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 75.

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, அப்போதைய முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நீண்ட காலமாக அந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்த மு.க ஸ்டாலின் இம்முறை தோல்வியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

வி.எஸ்.பாபு அரசியலில் புதியவர் அல்ல. ஒரு காலத்தில் அவர் தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், வடசென்னை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கொளத்தூர் தொகுதி உருவானபோது, மு.க ஸ்டாலின் அங்கு போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவரது வெற்றிக்காக முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவராக வி.எஸ்.பாபு கருதப்பட்டார். ஆனால், குறைந்த வாக்கு வித்தியாசம் காரணமாக கட்சி தலைமையில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், வடசென்னை தி.மு.க. அமைப்பு P. K. சேகர் பாபு வசம் சென்றது. இதனால் கட்சியில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு, அ.தி.மு.க. வில் இணைந்தார். அங்கும் எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்காததால், சில மாதங்களுக்கு முன்பு விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைந்தார்.

ஒரு காலத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றிக்காக உழைத்த வி.எஸ்.பாபு, இந்த தேர்தலில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வி.எஸ். பாபுவின் மறைவு தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HTML tutorial