HomeLifestyleசங்கு பூ டீயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்படி செய்வது?

சங்கு பூ டீயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்படி செய்வது?

உடல் எடையை குறைக்கவும், உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் பலர் க்ரீன் டீ குடித்து வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஆரோக்கிய விரும்பிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வரும் பானம் சங்கு பூ டீ அல்லது ப்ளூ டீ (Blue Tea). இயற்கையான நீல நிறத்துடன் கவர்ச்சியாக தோன்றும் இந்த பானம், பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்

சங்கு பூ டீ உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

இதையும் படிங்க : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாவல் பழம்!

நச்சுக்களை வெளியேற்ற உதவும்

காலையில் வெறும் வயிற்றில் சங்கு பூ டீ குடிப்பதால் உடலில் இருக்கும் கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேற உதவுகிறது. இதனால் உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.

முடி வளர்ச்சி

சங்கு பூவில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதன் காரணமாக முடி வேர்கள் வலுப்பெற்று, முடி உதிர்வு குறைந்து, முடி வளர்ச்சி அடையும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

சில ஆய்வுகளின்படி, சங்கு பூவில் உள்ள ஆந்தோசயனின் போன்ற சேர்மங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் இதை மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

அஜீரணம், வயிற்று எரிச்சல், குடற்புண் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு சங்கு பூ டீ நன்மை தரக்கூடும். இது செரிமான அமைப்பை சீராக செயல்பட உதவுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வெந்நீர் குடித்த பிறகு நடைபயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?

மன அழுத்தத்தை குறைக்க உதவும்

வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு சங்கு பூ டீ ஒரு இயற்கை பானமாக இருக்கலாம். இது மனதை அமைதிப்படுத்தி, சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி தர உதவுகிறது.

சங்கு பூ டீ செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • சங்கு பூ – 5 முதல் 6 பூக்கள்
  • வெந்நீர் – 1 கப்
  • தேன் – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை:

கொதித்த நீரில் சங்கு பூக்களை 5 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பின்னர் பூக்களை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம். எலுமிச்சை சாறு சேர்க்கும்போது நீல நிறம் ஊதா நிறமாக மாறுவது இதன் தனிச்சிறப்பாகும்.

கவனிக்க வேண்டியது என்ன?

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இதை பயன்படுத்துவது நல்லது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments