இரவில் படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.!

இன்றைய காலகட்டத்தில் பணிச்சுமை மற்றும் மாறிவரும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக பலரும் தூக்கம் வரமால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் மருத்துவர்களின் ஆலோசனையோடு தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான முறையில் தூக்கத்தைப் பெற ஒரு எளிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இரவில் தூங்கச் செல்லும்போது கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்வது மிக விரைவாக தூக்கத்தை வரவழைக்கும் என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. சியோல் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இரவில் சாக்ஸ் அணியாமல் தூங்கியவர்களை விட சாக்ஸ் அணிந்து தூங்கியவர்கள், அடிக்கடி கண்விழிக்காமல் நீண்ட நேரம் நிம்மதியாக உறங்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் இரவில் சாக்ஸ் அணியும்போது, அது நம் பாதங்களை கதகதப்பாக வைக்கிறது. பாதங்கள் சூடாகும்போது, அங்குள்ள இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இரத்த நாளங்கள் விரிவடைவதால், உடலின் மையப்பகுதியில் இருக்கும் வெப்பம் கைகள் மற்றும் பாதங்கள் வழியாக வெளிநோக்கிப் பரவி, உடலின் உட்புற வெப்பநிலை குறையத் தொடங்குகிறது.

சாக்ஸ் அணிவதன் மூலம் இந்த செயல்முறை வேகமாக நடக்கிறது. உடல் வெப்பநிலை குறைவதை கவனிக்கும் மூளை, “தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது” என்ற சமிக்ஞையைப் பெற்று, மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. இதனால் நமக்கு விரைவாகவும், ஆழமாகவும் தூக்கம் வருகிறது.

இரவு 11 மணி ஆகியும் தூங்காம இருக்கீங்களா? இந்த பிரச்சனைகள் வரலாம்

நமது உடலில் ஒரு இயற்கையான நேர அமைப்பு உள்ளது. இது இரவு நேரத்தில் உடலை ஓய்விற்கு தயார் செய்யும். குறிப்பாக இரவு 10.30 மணிக்குப் பிறகு, உடல் “ரிப்பேர் மோட்”க்கு மாறுகிறது. இந்த நேரத்தில் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன, ஹார்மோன்கள் சமநிலைக்கு வருகின்றன, செரிமான அமைப்பு மெதுவாகிறது.

இந்த நேரத்தில் தூங்காமல் நீண்ட நேரம் விழித்திருப்பதால் மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கிறது. இது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கொழுப்பு எரியும் வேகம் குறைகிறது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கிறது. இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்தாலும், டயட் பின்பற்றினாலும் உடல் எடை குறையாது.

தூக்கம் குறையும்போது, உடல் சோர்வு, மனநிலை பாதிப்பு. கவனக் குறைவு, எரிச்சல், வேலை திறன் குறைவு போன்றவை நாளடைவில் அதிகரிக்கும். மேலும், நீண்ட காலத்தில் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், நீரிழிவு போன்ற அபாயங்களும் அதிகரிக்கலாம்.

HTML tutorial