HomeTamilnaduசென்னையில் ஆகஸ்ட் 4 மின்தடை: உங்க ஏரியா லிஸ்டில் உள்ளதா? முழு விவரம்

சென்னையில் ஆகஸ்ட் 4 மின்தடை: உங்க ஏரியா லிஸ்டில் உள்ளதா? முழு விவரம்

சென்னையில் மின் வாரியத்தின் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 4, 2026 (செவ்வாய்க்கிழமை) நகரின் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

எந்த பகுதிகளில் மின்தடை?

வேளச்சேரி

சாரதி நகர், தாம்பரம்–வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.

அடையாறு

காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர், கே.பி. நகர், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர்.

முடிச்சூர்

முடிச்சூர் பகுதியில் அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர் மற்றும் கணேசபுரம் பிரதான சாலை ஆகிய இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மேடவாக்கம்

மேடவாக்கம் மின் வட்டாரத்தில் பெரும்பாக்கம், சேகரன் மால் சுற்றுப்பகுதி, கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம், விசாலாட்சி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர் மற்றும் ஆதிசாமி நகர்.

செயின்ட் தாமஸ் மவுண்ட்

செயின்ட் தாமஸ் மவுண்ட் மின்பகிர்மான எல்லைக்குட்பட்ட ராமர் கோயில் தெரு, மவுண்ட்–பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், மீனம்பாக்கம், எம்.கே.என். சாலை, குமரன் நகர், டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், நேவி ரெசிடென்சி, துளசிங்கபுரம், மாத்தியாஸ் நகர், பஜார் சாலை, ஆர்காட் பேட்டை, வி.ஜி.பி. முர்பி சதுக்கம், கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments