HomeTamilnaduதமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்

2026-27 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டசபை கூட்டம் தொடங்கியது. 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு

வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது

அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.

10 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினசரி தூய்மை பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு, 24 மை நேர பாதுகாப்புக்கு திட்டம் குழந்தைகள் படிக்க பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்பதை உணர்ந்து முடிவு.

3,734 பள்ளிகளில் ரூ.2,132 கோடி செலவில் அரசு பள்ளிகள் நவீனமயமாக்கப்படும்.

போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி.

மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு இயந்திர வழி கற்றல் புதிய தொழிற்பிரிவு தொடக்கம். ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும். 22,500 மெக்கானிக்குகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலம் பராமரிப்பு பயிற்சி அளிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ2,022 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘பள்ளி நிறைவுத் திட்டம்’ அறிவிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன. மேலும் 2,514 தொடக்கப் பள்ளிகள் மேம்படுத்தப்படவுள்ளன. 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.

பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் நவீன BRANDED சைக்கிள் வழங்கப்படும்.

பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு.

கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்; கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்; ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு

12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு.

மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். 1 மருத்துவர், 1 செவிலியர், 1 இயன்முறை மருத்துவருடன் இந்தச் சேவை வழங்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு.

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்; ரூ.110 கோடி ஒதுக்கீடு.

மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் திட்டத்திற்கு ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு.

‘ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு’ திட்டத்திற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு

புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு.

மீன் பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும். 1.93 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.135 கோடி ஒதுக்கீடு.

வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் – ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

கைத்தறி துறைக்கு ரூ.1,678 கோடி ஒதுக்கீடு.

இந்தியாவின் முதல் ஏஐ நகரம் – சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.

‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்’ அமைக்கப்படும் இதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

பூந்தமல்லி பைபாஸ்-போரூர்-வடபழனி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

சென்னைக்கு 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் மற்றும் பணிமனை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்யும் வகையில் ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்.

புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம்; வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு; ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வுக்காக 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments