HomeIndiaபோலி பனீருக்கு முழு தடை.. மீறினால் 6 மாத சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

போலி பனீருக்கு முழு தடை.. மீறினால் 6 மாத சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

உணவுக் கலப்படத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர அரசு பால் இல்லாத பனீருக்கு முழுமையான தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் இல்லாத பனீர் என்றால் என்ன?

பாலில் எலுமிச்சை சாறு, வினிகர், மோர் அல்லது தயிர் போன்ற சிட்ரிக் அமில உணவுப்பொருள்களில் ஏதேனும் ஒன்றை கலப்பதன் மூலம் பனீரை தயாரித்துவிடலாம்.ஆனால் Non-Dairy Paneer என்பது பால் கொழுப்பிற்கு மாற்றாக தாவர எண்ணெய்கள், வெஜிடபிள் ஃபேட்கள் மற்றும் பிற பாலல்லாத மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது தோற்றத்தில் சாதாரண பனீரைப் போலவே இருந்தாலும், உண்மையான பனீராக விற்பனை செய்யப்பட்டால் நுகர்வோர் ஏமாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FSSAI விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள விதிகளின்படி, பனீர் முழுமையாக பாலிலிருந்தே தயாரிக்கப்பட வேண்டும். அதில் மாவுச்சத்து, பாலல்லாத கொழுப்பு அல்லது செயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்படக் கூடாது.

ஏன் இந்த நடவடிக்கை?

கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிராவில் போலி பால் மற்றும் போலி பனீர் தயாரிப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் உணவுக் கலப்பட தடுப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக புனே மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1,400 கிலோ போலி பனீர் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குறைந்த விலையில் போலி பனீர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான கிலோ ஸ்கிம் மில்க் பவுடர், கிளிசெரோல் மோனோஸ்டியரேட் (GMS) பவுடர், பாம் ஆயில் உள்ளிட்ட மூலப்பொருட்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

விதிமீறினால் என்ன தண்டனை?

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-ன் கீழ், இந்தத் தடையை மீறுவோருக்கு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments