HomeTamilnaduமுடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு : மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா

முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு : மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா

த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதிமன்றத்​துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், தன்னுடைய கணவரும் தமிழக முதல்வருமான விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சங்கீதா திரும்ப பெற்றார் . இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments