HomeIndiaஒரு பைக்கில் இத்தனை ஹாரன்களா? தட்டித் தூக்கிய உத்தரகாண்ட் போலீஸ்

ஒரு பைக்கில் இத்தனை ஹாரன்களா? தட்டித் தூக்கிய உத்தரகாண்ட் போலீஸ்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக பைக் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பைக்கில் சுமார் 100 ஹாரன்கள் மற்றும் ஏராளமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலும், சாலைப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பைக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கன்வார் யாத்திரை நடைபெறும் காலகட்டத்தை முன்னிட்டு ஹரித்துவாரில் முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அதிகப்படியான சத்தத்துடன் பைக் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

பைக்கின் முன்பகுதி மற்றும் இருபுறங்களிலும் ஏராளமான ஹாரன்கள் வரிசையாக பொருத்தப்பட்டிருந்தன. மொத்தம் சுமார் 100 ஹாரன்கள் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, பைக்கில் அதிக எண்ணிக்கையிலான விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து, வாகன ஓட்டிக்கு விதிமீறலுக்கான அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பைக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments