HomeTamilnaduவேலூர், கே.வி.குப்பத்தில் இலவச மருத்துவ முகாம்

வேலூர், கே.வி.குப்பத்தில் இலவச மருத்துவ முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், ஜெம் மருத்துவமனை மற்றும் பாலாஜி அபிநயா பல் மருத்துவமனை ஆகியவை இணைந்து கே.வி.குப்பத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தின.

குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் கலந்து கொண்டு பேசினார்.

கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜேந்திரன், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் பழனி, வழக்கறிஞர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் 150 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 70 பேருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பாமக மாநில துணைத் தலைவர் ரமேஷ் நாயுடு, ரோட்டரி மருத்துவ இயக்குநர் பாபு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பாலாஜி, முன்னாள் தலைவர் வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் பாலமுருகன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments