HomeTamilnadu80-வது சுதந்திர தினம்: முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்!

80-வது சுதந்திர தினம்: முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சிறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 8.35 மணியளவில் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்யை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சிறப்பு மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, காவல்துறையினரின் வீரவணக்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, முப்படையினர் மற்றும் பல்வேறு காவல் பிரிவினரின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தேசியக் கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை தொடங்கினார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments