HomeTamilnaduபாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரூப் குமாரி சவுத்ரி புதிய தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து இரண்டு முறை இந்தப் பொறுப்பை வகித்தார். சுமார் 6 ஆண்டுகள் தேசிய மகளிர் அணி தலைவராக செயல்பட்ட வானதி சீனிவாசன், தற்போது அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசனுக்குப் பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரூப் குமாரி சவுத்ரி தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி.யாக உள்ளார். இதற்கு முன்பு அவர் சத்தீஸ்கர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தேசிய மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments