முதலமைச்சர் விஜய் பெயரை பயன்படுத்தி பணமோசடி : பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கும்பல், தங்களை விஜய் பெயரில் இயங்கும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு மக்களை சந்துதுள்ளனர். சிறு தொழில் தொடங்குவதற்கான கடன், இலவச நிதியுதவி, கல்விக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதாக கூறியுள்ளனர்.

முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படும் அந்த போலி அறக்கட்டளை மூலம், தகுதியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான மானியம் அல்லது நிதியுதவி கிடைக்கும் எனக் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை உண்மை என நம்பிய அப்பகுதி மக்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போன பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொலைபேசி எண்கள், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பான டிஜிட்டல் தடயங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial