தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களும் வெளியாக உள்ளன.
செப்டம்பர் 3
செப்டம்பர் 3 ஆம் தேதி துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘RDX’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
செப்டம்பர் 4
செப்டம்பர் 4 ஆம் தேதி ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ வெளியாகிறது. மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
செப்டம்பர் 10
செப்டம்பர் 10 ஆம் தேதி ‘சர்தார் 2’, ‘மண்டாடி’, ‘டிமாண்டி காலனி 3’ என ஒரே நாளில் மூன்று முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள ‘சர்தார் 2’ இதில் முக்கியமான படமாகும்.
அதே நாளில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படமும் வெளியாகிறது. மேலும், அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமாண்டி காலனி 3’ படமும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது.
செப்டம்பர் 24
தெலுங்கு திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.
செப்டம்பர் 25
செப்டம்பர் 25-ஆம் தேதி ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் சைத்ரா ஆச்சர், கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரே வாரத்தில் பல படங்கள் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் போட்டியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ‘சர்தார் 2’, ‘மண்டாடி’, ‘டிமாண்டி காலனி 3’ ஆகிய படங்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

