ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு : புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் பாகத்தில் இருந்த கதாபாத்திரங்களுடன் புதிய நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 2026-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial