ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணு பொருட்கள் விற்பனை நிலையத்தில் மனித உருவ ரோபோவை வாடிக்கையாளர் ஒருவர் தள்ளியுள்ளார். அதற்கு அந்த ரோபோ எதிர்வினையாற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
காணொலியில், கடைக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மனித உருவ ரோபோவின் அருகே ஒருவர் சென்று அதே கீழே தள்ளி விடுகிறார். பதிலுக்கு ரோபோ அந்த நபரை காலால் தாக்க முயன்றுள்ளது. மனிதர்களைப் போல ஒரு இயந்திரம் தன்னைத் தாக்கிய நபருக்கு பதிலடி கொடுக்க முயன்ற இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

