பிரீமியம் SUV பிரிவில் Kia நிறுவனம் புதிய Sorento மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட இந்த SUV, நாளை (செப்டம்பர் 4) இந்தியாவில் அறிமுகமாகிறது.
இந்தியாவுக்கான Sorento-வின் உற்பத்தி ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் உள்ள Kia தொழிற்சாலையில் ஏற்கனவே தொடங்கியுள்ளது. காருக்கான முன்பதிவுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
Sorento-வில் உயரமான மற்றும் நேர்த்தியான தோற்றம், வலுவான முன்பகுதி, தனித்துவமான LED லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. Sorento, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரிய குடும்பங்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். காரின் உட்புறத்திலும் பல நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. மேலும், உயர்தர ஆடியோ அனுபவத்திற்காக Bose audio system வழங்கப்படலாம்.
Kia நிறுவனம் முதல்முறையாக தனது strong-hybrid தொழில்நுட்பத்தை இந்திய சந்தையில் இந்த SUV மூலம் அறிமுகப்படுத்துகிறது. இதுதவிர, டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்பட உள்ளது. ஹைபிரிட் மாடலில் 1.6 லிட்டர் turbo-petrol இன்ஜினுடன் electric motor இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kia Sorento-வின் இந்திய விலை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.40 லட்சம் (ex-showroom) அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலைப் பிரிவில் Sorento, Toyota Fortuner, Skoda Kodiaq, Volkswagen Tayron, MG Majestor மற்றும் Jeep Meridian உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடும் என கூறப்படுகிறது.

