உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் 3 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 35 வயது நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்துள்ளது. குழந்தையின் தாய் இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரிந்த நபரான ஜிதேந்திரா, குழந்தையை பார்க்கவும் விளையாடவும் வீட்டுக்குள் வந்துள்ளார்.
குழந்தையை வெளியில் கொண்டு சென்ற அந்த நபர், சிறிது நேரத்துக்குப் பிறகு குழந்தையை மீண்டும் வைத்துவிட்டு சென்றார். அதன்பிறகு குழந்தை தொடர்ந்து அழுததால், தாய் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் அந்தரங்க உறுப்புகளில் இருந்து அதிக இரத்தப்போக்கு இருப்பதைக் கவனித்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக சைஃபை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிதேந்திராவை கைது விசாரித்து வருகின்றனர். தற்போது குழந்தைக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

