சட்டசபையில் விஜய் vs உதயநிதி : திடீரென வெடித்த வார்த்தை மோதல்

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று அரசியல் ரீதியாக கவனம் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் விஜய், அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை விரிவாக பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி கேள்வி

காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான தனது உரையில் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய ஆட்சியில் சட்டம் இருந்தாலும் ஒழுங்கு இல்லை என விமர்சித்தார். திமுக ஆட்சிக் காலத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

அரசில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதிலளிப்பதில்லை என்றும், பல்வேறு அமைச்சர்கள் மூலம் பதில்கள் வழங்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். கேள்விகளுக்கு உரிய ஆதாரங்களுடன், நேரடியாகவும் தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“திங்கள்கிழமை பதில் சொல்றேன்” – விஜய்

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், சட்டசபை உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை விளக்கம் அளிப்பதாக கூறினார்.

அப்போது, யாரும் அவையிலிருந்து வெளியேறாமல் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தரப்பில் உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் அவையில் இருந்து வெளியேறினார்.

“இப்போது யார் ஓடியது தெரியும்” – உதயநிதி பதில்

முதலமைச்சர் வெளியேறிய பின்னர் மீண்டும் பேசிய உதயநிதி ஸ்டாலின், அவையில் இருந்து தற்போது யார் வெளியேறினார் என்பது அனைவருக்கும் தெரியும் என பதிலடி கொடுத்தார். முதலமைச்சர் தனது கேள்விகளுக்கு பதிலளிக்க மூன்று நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டு தயாராக வரட்டும் என்றே தான் முன்கூட்டியே கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial