1 லட்சம் பேரை பணிநீக்கம் செய்யும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன், மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இதன் ஒரு பகுதியாக 2030ஆம் ஆண்டுக்குள் மொத்தம் சுமார் 1 லட்சம் பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேற்பார்வைக் குழு, மேலும் சுமார் 50,000 பணியிடங்களை குறைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே சுமார் 50,000 பணியிடங்களை குறைப்பதற்கான திட்டம் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 50,000 பணியிடங்கள் குறைக்கப்படுவதால் மொத்த எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளது..

சீனாவின் முன்னணி கார் நிறுவனமாக இருந்த ஃபோக்ஸ்வேகன், தற்போது அந்நாட்டில் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது. இந்த மாற்றம் நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மேலும் சவால்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க சந்தையில் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தொடர்பான வரிகள் நிறுவனத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial