பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் நுழைந்த 2 பேர் கைது

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கிடமாக நுழைந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததை போலீசார் கவனித்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்களில் ஒருவர் ரோகன் பரேக், 24, என்பது தெரியவந்தது. அவர் தன்னை பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி எனக் கூறி அடையாள அட்டை ஒன்றை போலீசாரிடம் காட்டியுள்ளார். அந்த அடையாள அட்டை போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அவருடன் வந்த மற்றொரு நபர், ரோகன் பரேக்கின் மெய்க்காப்பாளர் என கூறியுள்ளார். அவரிடம் போலீசார் சோதனை நடத்தியபோது துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial