கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது, வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடனும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.

