விநாயகர் சதுர்த்தி விடுமுறை : பலமடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் 14ம் தேதி திங்கள் கிழமை கொண்டப்பட உள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விடுமுறை காலத்தில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, சில ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட 4 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ரெயில் மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளை நம்பியிருக்கும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial