கார்த்தியை ஓரங்கட்டிய சூரி : இப்ப யாரு ப்ரைட்டா தெரியுறாங்கன்னு பாருங்க..!

கடந்த 2010 ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “நான் மகான் அல்ல” படத்தின் ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, அந்த படத்தில் கார்த்தியின் தோழியான நீலிமா ராணியின் திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் போது, கார்த்தி மறுபக்கத்தில் இருக்கும் சூரியை அழைத்து தன் பக்கம் வந்து நிற்க சொல்வர். “ஒரு போட்டோவைக் கூட என்னை விட்டு எடுக்க மாட்றியே மாப்ளே,” என சூரி கூறுவார்.

அதற்கு கார்த்தி, “இல்லடா, நீ என் பக்கத்துல நின்னா நான் கொஞ்சம் ப்ரைட்டா தெரிவன்ல”, என பதிலளிப்பார். ஒரு “பாடி ஷேமிங்” வசனம்தான் இது. 2010ல் இந்தப் படம் வெளியான கால கட்டங்களில் இப்படியான “பாடி ஷேமிங்” வசனங்களுக்கு எதிர்ப்புகள் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், கார்த்தி நடித்த சர்தார் 2 படமும், சூரி நடித்த மண்டாடி படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் மண்டாடி திரைப்படம் சர்தார் 2-வை விட அதிகமாக வசூல் செய்து முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டு படங்களின் வரவேற்பை வைத்து “இப்ப யாரு ப்ரைட்டா தெரியுறாங்கன்னு பாருங்க” என அந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பெரிய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்த சர்தார் 2-வை விட சூரியின் படத்திற்கு முதல் நாளிலேயே அதிக டிக்கெட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால், அதன் இரண்டாம் பாகமான சர்தார் 2 மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

மறுபுறம், காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ள சூரியின் அடுத்த படமாக மண்டாடி வெளியானது. படத்தின் கதைக்களம், திரைக்கதை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial