ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் தனிநபர்–வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண முறை அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
அதேபோல், பங்குச்சந்தை தொடர்பான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு குறைந்தபட்சமாக 0.02 சதவீத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.75,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.300-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ க்யூஆர் குறியீடு மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறு வணிகர்களுக்கு இந்தக் கட்டண முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு, தொகை எவ்வளவு இருந்தாலும் இந்தக் கட்டணம் விதிக்கப்படாது.

