காய்ச்சல் நேரத்தில் இதை மட்டும் செய்யாதீங்க., நிலைமை இன்னும் மோசமாகும்.!

காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல. நமது உடலுக்குள் புகுந்துள்ள வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகளை எதிர்த்து, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் போராடுகிறது என்பதற்கான அறிகுறிதான் இந்த காய்ச்சல். இந்த நேரத்தில் நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சரியான உணவுப் பழக்கம் மற்றும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வீட்டிலேயே காய்ச்சலை பாதுகாப்பாகக் கையாள முடியும்.

போதுமான ஓய்வு

காய்ச்சல் நேரத்தில் உடலுக்கு முழுமையான ஓய்வு தேவை. வேலை, உடற்பயிற்சி போன்றவற்றைத் தவிர்த்து தூங்குவது நல்லது. காய்ச்சலின் போது உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதால், அதிகளவு தண்ணீர், கஞ்சி, இளநீர் போன்ற திரவ ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.

மிதமான குளிர்ச்சி

டிஜிட்டல் தெர்மாமீட்டர் மூலம் உடல் வெப்பநிலையை அவ்வப்போது துல்லியமாக அளவிட வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது, சுத்தமான துணியை நனைத்து நெற்றி, கழுத்து மற்றும் கைகளில் ஒற்றி எடுக்கலாம். மிதமான வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் உடல் சூட்டைக் குறைக்க உதவும்.

இதையும் படிங்க : இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமா இருங்க., கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்..!

போர்வைகளால் போர்த்தி மூடுதல்

உடல் அதிகமாக வியர்க்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான போர்வைகளால் மூடி வியர்க்க வைப்பது தாறு. இதனால் உடல் வெப்பநிலையை மேலும் உயர்த்தும். எனவே, லேசான, காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும்.

அதிக சர்க்கரை மற்றும் காஃபின்

காய்ச்சல் நேரத்தில் காபி, டீ மற்றும் சோடா போன்ற பானங்கள் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து நிலைமையை மோசமாக்கும். அதேபோல், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் உடலின் வீக்கத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மெதுவாக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சமோசா, பக்கோடா, வடை போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானத்தைக் கடினமாக்கும். அதே போல சிப்ஸ், பாக்கெட் உணவுகள், அதிக காரம் மற்றும் ஊறுகாய் போன்றவை தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியை எரிச்சலடையச் செய்யும். காய்ச்சல் நேரத்தில் ஆவியில் வேகவைத்த உணவுகள், சூப், லேசான கஞ்சி, மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரத்தில் மாத்திரை சாப்பிட வேண்டும்?

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்

காய்ச்சலின் போது சிக்கன் சூப் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அது உடலுக்கு நீர்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சிக்கன் சூப் சாப்பிட முடியாத நேரத்தில் காய்கறி சூப் சாப்பிடலாம்.

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் பெர்ரி போன்ற பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இந்தப் பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், காய்ச்சலின் போது உடல் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial