கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம், முதல் வாரத்தை நிறைவு செய்த நிலையில் இந்தியாவில் சுமார் ரூ.17.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியானது. இதில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ராஷி விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சர்தார் 2’ முதல் நாளில் ரூ.5 கோடி வசூலித்துள்ளது. 2-வது நாளில் ரூ.2.50 கோடியும் வசூலித்ததாக தகவல் வெளியானது. படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மொத்தம் ரூ.17.75 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ‘சர்தார் 2’ திரைப்படம் 8 நாட்களில் சுமார் ரூ.9.75 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், அதனை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன; இதனால் பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2 கடும் சரிவை சந்தித்துள்ளது.

