மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் ₹2,000-க்கு மேல் UPI Payment நிறுத்த மத்தியப் பிரதேச பெட்ரோல் பம்ப் டீலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு அக்டோபர் 16 முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.300-ம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த சூழலில், மத்தியப் பிரதேச பெட்ரோல் பம்ப் டீலர்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது, ₹2,000-ஐ தாண்டும் பெட்ரோல் அல்லது டீசல் பில்களுக்கு UPI ஏற்கப்படாது. உதாரணமாக, ஒரு வாகனத்துக்கு ₹1,800 மதிப்பிலான பெட்ரோல் அல்லது டீசல் பில்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆனால் ₹2,500 அல்லது ₹3,000 போன்ற தொகைக்கு பெட்ரோல் அல்லது டீசல் பில்களுக்கு UPI மூலம் பணம் செலுத்த முடியாது.
இதையும் படிங்க : நோயாளிகளுக்கு மருந்து கொடுத்த மருத்துவரின் ஓட்டுநர்.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!
₹2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில் ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 என்ற நிலையான MDR நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த MDR தொகையை வாடிக்கையாளர் நேரடியாக செலுத்த வேண்டியதில்லை. இது வணிகர் சார்ந்த கட்டண அமைப்பில் இடம்பெறும் தொகையாகும். ₹2,000-க்கு மேற்பட்ட எரிபொருள் பரிவர்த்தனைகளில் இந்த கூடுதல் செலவை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுவதால், பெட்ரோல் பங்க் டீலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

