ராமாயணா ஆடியோ உரிமை இத்தனை கோடியா? தரமான சம்பவம் செய்த ஏ.ஆர்.ரகுமான்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது. ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களுக்கான மொத்த தயாரிப்பு செலவு ரூ.4,000 கோடி என சொல்லப்படுகிறது.

ராமாயணம் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமன் கதாபாத்திரத்திலும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : போதைப்பொருள் காட்சிகளா? இனி இந்த எச்சரிக்கை கட்டாயம்.. தணிக்கை வாரியம் புதிய விதிகள்

இந்நிலையில், ராமாயணா திரைப்படத்தின் ஆடியோ உரிமை ரூ.85 கோடிக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமாயணா படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் ஆடியோ உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ராமாயணா படத்தின் ஆடியோ உரிமை ரூ.85 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial