நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ‘மகாவீர் கர்ணா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் ரமேஷ் வர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘மகாவீர் கர்ணா’ படத்தில் ராகவா லாரன்ஸ் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் புராணப் படமாகும்.
இந்தப் படத்தை பென் மூவிஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. முன்னதாக ராகவா லாரன்ஸ் மற்றும் ரமேஷ் வர்மா இணையும் படம் ‘கால பைரவா’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தப் படத்துக்கு ‘மகாவீர் கர்ணா’ என புதிய பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மகாவீர் கர்ணா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளுடன் இந்தியிலும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பு மிகப்பெரிய அளவில் நடைபெறுவதாகவும், பிரம்மாண்டமான அரண்மனை மற்றும் போர்க்கள காட்சிகளுக்காக சிறப்பு அரங்குகள் அமைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

