இந்தியாவில் இனி சோப்பு, ஷாம்பு, பற்பசை, அழகு சாதனப் பொருட்களின் பாக்கெட்டில், அவை சைவமா, அசைவமா என்பதை குறிக்கும் அடையாளம் இடம்பெற வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அறிவித்துள்ளது.
இதன்படி, சைவ மூலப்பொருட்களைக் கொண்ட பொருட்களுக்கு பச்சை நிற புள்ளியும், அசைவ மூலப்பொருட்களைக் கொண்ட பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளியும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அடையாளம் பொருளின் பாக்கெட்டில் மேல்பகுதியில் இடம்பெற வேண்டும் என அரசிதழ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோப்பு, ஷாம்பு, பற்பசை, அழகு சாதனப் பொருட்களை வாங்கும்போது, அதன் மூலப்பொருட்களின் தன்மை குறித்த அடிப்படை தகவலை பாக்கெட்டில் உள்ள குறியீட்டின் மூலம் நுகர்வோர் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
பச்சை புள்ளி, பொருள் சைவ மூலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும். சிவப்பு அல்லது பழுப்பு புள்ளி, பொருள் அசைவ மூலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும். இந்த அடையாளம் பாக்கெட்டின் முக்கிய காட்சிப் பகுதியில் மேல்பகுதியில் தெளிவாக பார்க்க முடியும்.

