மனிதரும் ரோபோட்டும் கூண்டுக்குள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் லாபென்னா என்ற நபர் சுமார் 6 அடி உயரம் கொண்ட ஹியூமனாய்டு ரோபோட்டுடன் மோதினார். ஒரு கட்டத்தில் பலமான உதையால் லாபென்னா கூண்டுக்குள் தூக்கி வீசப்பட்டார். இந்த நிகழ்வை அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிறுவனமான REK ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ரோபோட்டின் தோற்றமும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 6 அடி உயரத்தில் மனித உருவ அமைப்பைக் கொண்ட இந்த இயந்திரம், திரைப்படங்களில் இடம்பெறும் ‘டெர்மினேட்டர்’ கதாபாத்திரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

