AI குறித்து பேசிய இளவரசர் ஹாரி: திடீரென நின்ற டெலிப்ராம்ப்டர்

செயற்கை நுண்ணறிவு மற்றும் குழந்தைகள் மீது தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்த இளவரசர் ஹாரியின் உரையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

செப்டம்பர் 23 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இளவரசர் ஹாரி கலந்துகொண்டார். இதில், செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து பேசினார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

ஹாரி பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக டெலிப்ராம்ப்டர் செயல்படாமல் போனது. இதனால் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர், அவர் மேடையை விட்டு வெளியேறினார். இதனால், அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பார்வையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.

டெலிப்ராம்ப்டர் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர், சுமார் 40 நிமிடங்கள் கழித்து இளவரசர் ஹாரி மீண்டும் மேடைக்கு வந்தார். மீதமிருந்த உரையை அவர் பேச தொடங்கினார். பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை ஹாரி நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார். செயற்கை நுண்ணறிவு குறித்த தனது உரைக்குள் AI புகுந்துவிட்டதாக அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial