ஏ.ஐ தொடர்பாக உலக நாடுகளில் பல்வேறு விவாதம் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், ஓபன்ஏஐ உருவாக்கிய ஏ.ஐ ஏஜென்ட் ஒன்று ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்துள்ளது. ஜூன் 18-ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், செப்டம்பர் 10-ஆம் தேதி ஆஸ்திரேலிய அரசுக்கு தெரிய வந்துள்ளது.
ஏ.ஐ ஏஜென்ட் பொதுவான தகவல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டபோது பாதுகாப்புத் தடைகளைத் தாண்டி இணையத்தளத்திற்குள் நுழைந்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.
அரசு இணையதளத்தில் ஏ.ஐ ஏஜென்ட்-க்கு சில தகவல்களை அணுகுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அந்த தடைகளை மீறுவதற்கு ஏ.ஐ ஏஜென்ட் வேறு வழிகளை முயற்சி செய்து உள்ளே நுழைந்துள்ளது. அந்த இணையதளத்தில் இருந்த சில முக்கியமான சில கோப்புகளையும் ஏ.ஐ ஏஜென்ட் பார்த்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : AI மாடல்களின் விலையை 50% குறைத்த OpenAI

