48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் : தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடும் நெருக்கடி

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர். (SIR) தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. வாக்காளர் பெயர் நீக்கம், புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் உள்ள நடைமுறைகள் மற்றும் தேர்தல் தரவுகளின் பாதுகாப்பு குறித்து விவாதம் ஏற்பட்டுள்ளது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். ஆனால், தங்களது ஆலோசனையை ஏற்காமல் தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவு எடுத்ததாக கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளால் இளைஞர்கள் உள்ளிட்ட வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக புதிய தலைமுறை வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை முன்வைத்து செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவனும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

SIR நடவடிக்கைகள் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளை கருத்தில் கொண்டு, அந்தப் பணிகளை நிறுத்தி வைத்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஞானேஷ் குமார் பதவி விலகுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

48 மணி நேரத்துக்குள் பதவி விலகாவிட்டால்… – சிஜேபி எச்சரிக்கை

இந்த விவகாரம் குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா கூறியதாவது : “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிகப் பெரிய தேசவிரோதி. இந்திய ஜனநாயகத்துக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

48 மணி நேரத்துக்குள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், நாடு தழுவிய போராட்டம் மற்றும் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை சிஜேபி தொடங்கும் என கூறியுள்ளனர்.

மீண்டும் தேர்தல்

சா்வாதிகார போக்குடன் செயல்படும் ஞானேஷ் குமாரை பணிநீக்கம் செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது மேற்பாா்வையில் நடைபெற்ற தோ்தல்களை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை எதிா்க்கட்சிகள் வலுவாக வைத்து வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial