கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் உயிரிழப்பு : நாகாலாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

நாகாலாந்து மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3,000 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொகோக்சுங் மற்றும் துவென்சாங் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நாகாலாந்து மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும், துவென்சாங் மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஐ. புங்லாங் சாங் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய மதுபானங்களை விற்பனை செய்ததாகக் கருதப்படும் நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், சுமார் 3,000 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாகாலாந்தில் 1990ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்திருப்பது மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத அல்லது லேபிள் இல்லாத மதுபானங்களையும், சந்தேகத்திற்குரிய சட்டவிரோத மதுபானங்களையும் குடிக்க வேண்டாம் என்று நாகாலாந்து போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial