Google DeepMind நிறுவனத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓ’கல்லஹன் என்ற பொறியாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை வேகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட விரும்பவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ராபர்ட் ஓ’கல்லஹனின் கருத்துப்படி, தற்போதைய AI வளர்ச்சி மனிதர்கள் தனிநபர்களாகவும், சமூகமாகவும் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ளும் வேகத்தை விட அதிகமாக உள்ளது.
கணினிகள், இணையம், ஸ்மார்ட்போன்கள் போன்ற முந்தைய தொழில்நுட்ப மாற்றங்களுடன் ஒப்பிடும்போது, AI ஏற்படுத்தும் மாற்றத்தின் வேகம் வேறுபட்டதாக அவர் கருதுகிறார்.
AI திறன்கள் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இருக்கும் மாதிரிகளின் திறன் மட்டுமல்லாமல், புதிய வழிமுறைகள் மற்றும் மென்பொருள் கருவிகள் மூலமாக ஏற்கெனவே உள்ள AI அமைப்புகளின் திறன்களையும் மேலும் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ChatGPT பயனர்களின் 53 படங்கள் கசிவு: OpenAI AI ஏஜென்ட்கள் மீது விசாரணை தீவிரம்

