மதுபானக் கடைக்குள் புகுந்து சரக்கு அடித்து மட்டையான குரங்கு – வைரலாகும் வீடியோ

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மதுபானக் கடைக்குள் புகுந்த பெண் குரங்கு ஒன்று மதுபானத்தை குடித்துவிட்டு கடைக்குள்ளேயே தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ராஞ்சி மாவட்டம் ஓர்மாஞ்சி பிளாக் சவுக் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்குள் பெண் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது. கடையில் இருந்த ஊழியர்கள் அதனை வெளியேற்ற முயன்றுள்ளனர். ஆனால், குரங்கு கடையை விட்டு வெளியேறாமல் அங்கிருந்த மதுபான பாட்டிலை எடுத்து குடித்துள்ளது. சிறிது நேரத்தில் மதுபோதையில் அங்கேயே தூங்கியுள்ளது.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த குரங்கு கடந்த சில நாட்களாகவே அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், காலியாக இருந்த மதுபான பாட்டில்களில் மீதமிருந்த மதுவை குடித்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial