கார்த்தியின் ‘சர்தார் 2’ ; ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய தகவல்

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கார்த்தி இதில் தந்தை–மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தண்ணீர் மற்றும் குடிநீர் வணிகம் தொடர்பான பிரச்சனையை மையமாகக் கொண்டிருந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘சர்தார் 2’ வெளியானது. ‘சர்தார் 2’ படத்தில் கார்த்தி மீண்டும் தந்தை–மகன் என இரட்டை வேடத்தில் நடித்தார். எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்தனர்.

2026 செப்டம்பர் 10-ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘சர்தார் 2’, வெளியான அடுத்த சில நாட்களிலேயே வசூலில் கடுமையான சரிவை சந்தித்தது. இப்படம் உலகளவில் சுமார் ரூ.23.85 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், ‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அக்டோபர் 1, 2026 முதல் Amazon Prime Video-வில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial