600 ஆண்டுகள் பழமையான மசூதி இடிப்பு? AI வீடியோவால் உஜ்ஜைனில் வெடித்த பதற்றம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக உஜ்ஜைன் நகரில் பழமையான ஷாஹி மசூதி முழுவதுமாக இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து அங்கு மக்கள் திரண்டதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உஜ்ஜைன் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள சிம்ஹஸ்த கும்பமேளாவை முன்னிட்டு சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வீடுகள், கடைகள் மற்றும் சாலையோரத்தில் உள்ள சில பகுதிகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியும் அடங்கும்.

முதலில் மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மசூதி முழுவதும் இடிக்கப்படுவது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த AI வீடியோவை உண்மை என நம்பிய மக்கள், மசூதியின் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சாலை விரிவாக்கத்துக்குத் தேவையான மசூதியின் பகுதியை அகற்றும் பணி பாதுகாப்புடன் தொடரும் என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial