ஸ்மார்ட்போன் சந்தையில் OPPO நிறுவனம் தனது OPPO K14 Plus 5G மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதிக திறன் கொண்ட பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் Star White மற்றும் Solar Orange ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8,000mAh பேட்டரி கொண்ட இந்த போனுக்கு 45W அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. OPPO K14 Plus 5G-ன் ஆரம்ப விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6GB RAM + 128GB Storage – ரூ.29,999 என்ற விலையிலும், 8GB RAM + 128GB Storage – ரூ.32,999 என்ற விலையிலும், 8GB RAM + 256GB Storage – ரூ.35,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.
இந்த போன் அக்டோபர் 8, 2026 மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. விற்பனை தொடங்கும் முதல் நாளில் தகுதியான வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.4,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் 6 மாத No-Cost EMI வசதியும் வழங்கப்படுகிறது.
Flipkart மற்றும் OPPO-வின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்த போனை வாங்க முடியும். முதல் நாள் வங்கி தள்ளுபடி மற்றும் No-Cost EMI போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

