இன்று தமிழ் விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்ட தினம் : தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இணையத்தில் நாம் எந்த ஒரு தகவலைத் தேடினாலும் முதலில் கண்ணில் படும் இணையதளங்களில் ஒன்று விக்கிபீடியா. இது உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கி வரும் இலவச கலைக்களஞ்சியமாக செய்யப்பட்டு வருகிறது.

விக்கிபீடியா 2001-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கு 2000-ம் ஆண்டில் ‘நுபீடியா’ என்ற தளம் தொடங்கப்பட்டது. இதில் கட்டுரைகளை உருவாக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டன. பின்னர் பலரும் இணைந்து எளிமையாகவும், வேகமாகவும் எழுதுவதற்காக விக்கிபீடியா உருவாக்கப்பட்டது.

ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் இவர்கள் இருவரும் விக்கிபீடியாவை உருவாக்கிய முக்கிய நபர்கள். விக்கிபீடியா ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டது. தற்போது, உலகின் பல்வேறு மொழிகளில் செயல்பட்டு வருகிறது.

விக்கிபீடியாவை நடத்தும் Wikimedia Foundation நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. ஆனால் விக்கிபீடியாவை பராமரிப்பது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் கட்டுரைகளை எழுதுவதிலும் திருத்துவதிலும் பங்களிக்கின்றனர்.

தமிழ் விக்கிபீடியா 2003-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆங்கில விக்கிபீடியா தொடங்கப்பட்ட சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கான தனி விக்கிபீடியா உருவாக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இணைய ஆர்வலர்கள், தன்னார்வ ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகித்தனர். 2013-ல் தமிழ் விக்கிபீடியா தனது 10-வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

விக்கிபீடியாவில் சாதாரண இணையதளங்களைப் போல விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை. அதற்கு பதிலாக, வாசகர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகள் அதன் முக்கிய நிதி ஆதாரமாக உள்ளன. 2024–25 நிதியாண்டில் சுமார் 82.98 லட்சம் டாலர்கள் வருவாய் கிடைத்தது.

2026-ம் ஆண்டில் Wikimedia Foundation வெளியிட்ட தகவலின்படி, விக்கிபீடியா 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கி வருகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம் என ஒவ்வொரு மொழிகளுக்கும் தனித்தனி பதிப்புகள் உள்ளன.

விக்கிபீடியாவில் 6.5 கோடிக்கும் அதிகமான கட்டுரைகள், 300-க்கும் மேற்பட்ட மொழிகள், மாதத்திற்கு சுமார் 15 பில்லியன் பார்வைகள், சுமார் 2.5 லட்சம் தன்னார்வ ஆசிரியர்கள் உள்ளதாக Wikimedia Foundation தெரிவித்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial