செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் திடீர் உயர்வு! ஒரே மாதத்தில் ₹3,668 கோடி அதிகரிப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹2,03,521 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 14.7 சதவீதம் அதிகமாகும். ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1,99,853 கோடியாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது செப்டம்பரில் ₹3,668 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது.

கடந்த ஆண்டை விட 14.7 சதவீதம் உயர்வு

கடந்த 2025 செம்ப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.77 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, 2026 செப்டம்பரில் ₹2.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 14.7 சதவீத வளர்ச்சியாகும். அதே போல இறக்குமதி வருவாய் கடந்த ஆண்டை விட 25.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

பல மாநிலங்களில் சரிவு

செப்டம்பர் மாதத்தில் பல மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் சரிவை சந்தித்துள்ளன. சிக்கிம் மிகக் கடுமையான சரிவைக் கண்டது, அதன் வருவாய் 51% குறைந்து ரூ. 194 கோடியாக உள்ளது. ஜம்மு காஷ்மீரின் வசூல் 29% சரிந்து ரூ. 487 கோடியாகவும், உத்தரகாண்ட் 23% சரிந்து ரூ. 1,277 கோடியாகவும், இமாச்சல பிரதேசம் 21% சரிந்து ரூ. 640 கோடியாகவும் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% சரிந்து ரூ.10,188 கோடியாக பதிவாகியுள்ளது. கோவாவின் வசூல் 7% சரிந்து ரூ.494 கோடியாகவும் குறைந்துள்ளது. புதுச்சேரியில் 31% சரிவுடன் ரூ.179 கோடியாகவும், மேகாலயாவில் 14% சரிவுடன் ரூ.164 கோடியாகவும் உள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial