மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஏ.ஐ குறித்து பிரபல செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :-
தற்போதைய ஏ.ஐ அமைப்புகள் மனிதர்களின் கண்காணிப்புக்கு உட்பட்டே இயங்கி வருகின்றன. அவற்றை மனிதர்களால் நிறுத்த முடியாத வகையில் செயல்படும் நிலைக்கு இன்னும் வரவில்லை. செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டை மீறினால் உடனடியாக நிறுத்த முடியாது.
மனிதர்களில் சிலர் செயற்கை நுண்ணறிவை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவது ஆபத்தாக இருக்கலாம். மோசடி, இணையத் தாக்குதல், மின்சார கட்டமைப்புகளை சீர்குலைத்தல் போன்ற செயல்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகளை முழுமையாக புறக்கணிக்கக் கூடாது.
எனவே, ஏ.ஐ அமைப்புகள் என்ன செய்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொழில்நுட்பங்களும் பாதுகாப்பு நடைமுறைகளும் கொண்டு வர வேண்டும். அரசுகள், சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

