ஏ.ஐ மூலம் நிர்வாக அமைப்பை மாற்ற முடியுமா? BMW எடுத்த அதிரடி முடிவு

ஏ.ஐ மூலம் நிர்வாக அமைப்பை மாற்றியமைக்க ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான BMW முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிர்வாகம் தொடர்பான பணியிடங்களில் சுமார் 20 சதவீதத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாகன வடிவமைப்பு, பொருட்கள் கொள்முதல், விற்பனை, சந்தைப்படுத்தல் என நிறுவனத்தின் பல்வேறு பணிகளில் ஏ.ஐ பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. BMW நிறுவனத்தில் சுமார் 65 மூத்த துணைத் தலைவர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு கீழே சுமார் 400 மூத்த நிர்வாகப் பொறுப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 சதவீத குறைப்பு அமல்படுத்தப்பட்டால், 100-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகப் பொறுப்புகள் பாதிக்கப்படக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக ஃபோர்டு தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி ஏ.ஐ பயன்பாடு காரணமாக நிர்வாக பணிகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறியிருந்தார். செயற்கை நுண்ணறிவு காரணமாக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளின் தன்மை மாறும் விவாதம் ஏற்கனவே தீவிரமடைந்துள்ளது.

BMW-யின் தற்போதைய நடவடிக்கை, செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பப் பணிகளுக்கு மட்டுமல்லாமல் நிறுவனங்களின் நிர்வாக அமைப்பையும் மாற்றத் தொடங்கியுள்ளதை காட்டும் மற்றொரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : AI-யை ஒரே பொத்தானில் நிறுத்த முடியுமா? பில் கேட்ஸ் விளக்கம்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial