காங்கோவில் எபோலா கோரத்தாண்டவம்: 4,000-ஐ கடந்த உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த மே மாதம் முதல் எபோலா வைரஸ் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4,000-ஐ கடந்துள்ளது. 8,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பரவி வரும் இந்த வைரசுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ, சிகிச்சை மருந்தோ இல்லை. இதனால் ஆரம்பத்திலேயே நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்துதல், தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல் மற்றும் உரிய மருத்துவப் பராமரிப்பு வழங்குதல் ஆகியவை மூலம் கண்காணிக்கப்படுகிறது.

செப்டம்பர் 23ஆம் தேதி நிலவரப்படி 7,890 பாதிப்புகளும் 3,799 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்த நிலையில், செப்டம்பர் 29ஆம் தேதி வரையிலான தரவிலும் 8,224 பாதிப்புகள் மற்றும் 3,982 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன. தற்போது இது காங்கோவில் இதுவரை பதிவான மிகப்பெரிய எபோலா பரவலாக மாறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது உலக சுகாதார அமைப்புக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நோய் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் பரவாமல் இருக்க சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

எபோலா வைரஸ் பாதிப்புகள் என்ன?

எபோலா வைரஸ் என்பது மிகவும் தீவிரமான தொற்றுநோயாகும். இந்த நோய் உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். எபோலா நோய் ஏற்பட்ட பிறகு, திடீரென காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, தசைவலி மற்றும் மிகுந்த சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

நோய் தீவிரமடையும்போது வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதனால் உடலில் அதிக அளவு நீர் சத்துக்கள் குறைந்து, கடுமையான நீரிழப்பு ஏற்படும். எபோலா வைரஸ் தீவிரமான நிலையில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial