தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, தனது விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ₹3-ம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (அக்டோபர் 3) அமலுக்கு வந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில், தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி நிறுவனம், நாடு முழுவதும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு சுமை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

