செம்ம திரில்லர்.., ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு!

விஷ்ணு விஷால் நடிப்பில், ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 5 ம் தேதி வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. இந்தப் படம், வழக்கமான கதைக்களத்தில் இருந்து மாறுபட்டு ரசிகர்களுக்கு மிரட்டலான திரில்லர் அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக ஜிப்ரானின் இசை படத்துக்கு கூடுதல் அனுபவத்தை கொடுத்தது. இப்படத்தில், விஷ்ணு விஷாலுடன் அமலா பால், காளி வெங்கட், முனீஸ்காந்த், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் காவத்துறையின் விசாரனை, அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள், எதிர்பாராத திருப்பங்கள் என பல்வேறு காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. படத்தின் இயக்கம், நடிப்பு, கதை மற்றும் பரபரப்பான திரைக்கதை ஆகியவற்றுக்கு அதிகமான பாராட்டுகள் கிடைத்தது.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, நார்வே தமிழ் திரைப்பட விழா விருது, ஆனந்த விகடன் சினிமா விருது என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. ரசிகர்களால் இன்றளவும் வரவேற்பை பெற்றுள்ள ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

2018-ல் வெளியான ராட்சசன், ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், தமிழ் சினிமாவில் பேசப்பட்ட முக்கியமான திரில்லர் படங்களில் ஒன்றாக இருந்தது. ரசிகர்களின் வரவேற்பு, வசூலில் வெற்றி, விமர்சகர்களின் பாராட்டு மற்றும் பல்வேறு விருதுகள் என பல வகையிலும் இந்தப் படம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial