“ஏஐயால் சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும்” : சாம் ஆல்ட்மேன் கருத்து

ஏ.ஐ வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், அதனால் ஏற்படக்கூடிய சில பாதிப்புகளை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவின் முழுமையான நன்மைகளைப் பெற வேண்டும் என்றால், அதனால் ஏற்படும் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி, இணையத் தாக்குதல் போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாமல் போகும் என அவர் கூறியுள்ளார்.

சாம் ஆல்ட்மேனின் இந்த கருத்துக்கு அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ஏஐ மூலம் சில மோசமான விஷயங்கள் நடப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கருத்தை அவர் விமர்சித்துள்ளார். ஏஐ தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தி பொதுமக்களை பாதிக்காத வகையில் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கல்வி, மருத்துவம், மென்பொருள், வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் மோசடி, இணையப் பாதுகாப்பு, தவறான தகவல் பரவல் மற்றும் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் திறன் போன்ற ஆபத்துகள் குறித்தும் கவலை அதிகரித்து வருகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial