பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கார் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், தற்போது, ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனமும் தனது கார்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதில் ஹோண்டா எலிவேட் காருக்கு அதிகபட்சமாக ரூ.2,34,600 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1.71 லட்சம் வரையிலும், புதிய ஹோண்டா அமேஸுக்கு ரூ.66,800 வரையிலும் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாடலை பொறுத்து மாறுபடும்.
ஹோண்டா எலிவேட்
அக்டோபர் மாதத்தில் ஹோண்டா எலிவேட் காருக்கு மொத்தமாக ரூ.2,34,600 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா எலிவேட் இந்தியாவில் அக்டோபர் 6-ம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், தற்போதைய எலிவேட் கார்களுக்கு இந்த அதிகபட்ச சலுகை வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி கார்களுக்கு ரூ.1,70,900 வரை அதிகபட்ச சலுகை வழங்கப்படுகிறது. புதிய அமேஸுக்கு அதிகபட்சமாக ரூ.66,800 வரை சலுகை வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் அக்டோபர் 31, 2026 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் வகை, விற்பனை செய்யப்படும் நகரம், விற்பனையக இருப்பு மற்றும் வாடிக்கையாளர் தகுதி ஆகியவற்றைப் பொறுத்து சலுகைகள் மாறுபடலாம். பண்டிகைக் காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

